முன்னுரை
40 வயதான நடேசன் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பொறியாளராக வேலை செய்பவர். மாசம் 75,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடைய உறவினர்களும் நண்பர்களும் “ அவருக்கு என்ன ? நல்ல சம்பாதிக்கிறார் ” என்று சொல்வார்கள். ஆனால் நடேசனுக்கோ ஒவ்வொரு மாசமும் மாச கடைசி 25 தேதி வந்துவிட்டால் ‘ரெஸ்ட்லெஸ்’ ஆகிவிடுகிறார். EMI கட்டுதல், கடன் அடைத்தல், கிரெடிட் கார்டு பேமென்ட் போன்றவற்றால் கையில் உள்ள பணம் அத்தனையும் செலவழித்து மிச்சம் ஒரு ஏழாயிரம் மீந்தால் அதுவே அதிகம்.
“ நான் நல்லாத்தானே சம்பாதிக்கிறேன், ஏன் எனக்கு பணம் போதாமல் போய்விடுகிறது. எப்படித்தான் சமாளிக்கிறது?” என்று நொந்துகொள்வார். அவர் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அவர் முயற்சிக்கவும் இல்லை.
உங்கள் கதையும் இந்த நிலையில்தான் இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! உங்களைப்போல, நம் இந்தியாவில் சுமார் 75 சதவிகிதத்தினர் இப்படித்தான் புலம்பிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பலர் பள்ளிகூடத்தில் ‘கணிதம்’ பாடம் படித்தவர்கள். ஆனால் அங்கு பணத்தை எப்படி திறமையாகக் கையாள்வது என்று யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. அதைத் தெரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. நிதி மேலாண்மை பற்றின விழிப்புணர்வு அறவே இல்லை. எனவே இந்த பணக் கல்வியைச் சுலபமாகத் தரவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பிளாக் தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் சேகர்,” எனக்கு இன்கிரீமென்ட் வரட்டும், சம்பளம் கூடட்டும் பிறகு நான் சேமிக்கவும் முதலீடு செய்யவும் தொடங்குகிறேன்” என்று இத்தனை வருடமாக சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் கண்ணில் இந்த பிளாக் பட்டது. இதில் உள்ள போஸ்டுகளைப் படிக்கத் தொடங்கினான். நல்ல முடிவு எடுக்க ஆரம்பித்தான்.
ஆறு மாத காலம் தன்னுடைய செலவுகளை பட்ஜெட் போட்டு செலவு செய்யத் தொடங்கினான். ஒரு வருடத்தில் தன் கடன்களை அடைத்து, மாசம் 5000 ரூபாய் சேமித்து அதை முதலீடு செய்யத் தொடங்கினான். அவனுடை சேமிப்பும் முதலீடும் வளர்ந்துகொண்டு வந்தது. 5 வருடத்தில் அவனுடைய பணம் பல மடங்கு பெருகி, அவன் சொத்து இப்போது 15 லட்சமாக பெருகி இருகிறது. இப்போதெல்லாம் அவனால் டென்ஷன் இல்லாமல் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. இது சேகரால் மட்டும் முடிந்தது இல்லை, உங்களாலும் முடியும். உங்களின் நிதிப் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள், இன்றே இப்போதே தொடங்குங்கள்.
பணம் உங்களை ஆள விடாதீர்கள். நீங்கள் பணத்தை ஆளுங்கள். பணத்திற்கு நீங்கள் எஜமானர். தொடர்ந்து வரும் பதிவுகளை ஒன்றையும் விடாமல் படித்து நிதி சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்.
பணம் வெறும் பேப்பரா?
பணம் என்பது உங்களுடைய பொருளாதார சுதந்திரம். வாழ்க்கையின் இன்றி அமையாதவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளைப் பெற பணம் அவசியம். பொருட்கள் வாங்க , செலவு செய்ய, சிறந்த வாழ்கையை மேற்கொள்ள பணம் தேவை. பணம் சும்மா வந்துவிடவில்லை. பணத்தை நாம் சம்பாதித்துப் பெறுகிறோம். அதை வைத்துகொண்டு நாம் நம் விருப்பப்படி செலவிடுகிறோம். நம் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணம் ஒரு கருவியாக வேலை செய்கிறது.
எனவே அந்த கருவியை பல மடங்கு பெருக்கிக் கொண்டால் நாம் நம் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளலாம். அந்த கருவியான பணத்தைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்துகொள்வதே இந்த நிதிப் பயணத்தின் தொடக்கமாகும்.
உதாரணங்கள்
நாற்பது வயதானபரமசிவம் என்னுடைய தெருவில் வசிக்கும் ஒரு நீண்ட கால நண்பர். மாநில அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் குடும்பஸ்தர்.அவருக்கு மனைவியும் ஹைஸ்கூலில்படிக்கும் இரு பிள்ளைகளும் இருக்கின்றனர். என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் வருமான பிரச்சனை சொல்லி மிகவும் நொந்துகொள்வார். “வருமானத்துக்கு மிஞ்சி செலவாகி கடன் வாங்கி கஷ்டப் படுகிறேன். குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லி வருத்தப்படுவார்.
அதேபோல் எதிர்வீட்டில் குடி இருக்கும் சங்கரும் ‘ சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியவில்லை. என்னால் மாசக் கடைசியில் ஒரு காசுகூட சேமிக்க முடிவதில்லை’ என்று சொல்லி புலம்புவார்.
இவர்களைப் போன்று பலரும் பணக் கஷ்டத்தால் மனம் உடைந்து பொய் இருக்கின்றனர். எப்படி செலவு செய்வது, எப்படி பணத்தை சேமிப்பது என்று சரியான வழி தெரியாமல் தடுமாடுகின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா? பணத்தை சேமிப்பது என்பது சுலபமானது. பணத்தை சேமிக்கவும் மட்டுமில்லாமல் பணத்தை பெருக்கவும் எளிய பிராக்டிகலான வழிகள் பல உள்ளன. பலர் அந்த வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் , சரியான திட்டம் இல்லாமல் கடனில் மூழ்கி அதிலிருந்து எப்படி மீள்வது என்பது தெரியாமல் தவிக்கின்றனர்.
உண்மை என்னவெனில் எல்லோராலும் சுலபமாக பணத்தை சேமித்து அதை பெருக்கவும் கடனின்றி வாழவும் முடியும் . எப்படி? என்னென்ன வழிகள்? எப்படி கையாள்வது என்று இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். பல அறிய நுணுக்கமான அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்துகொள்வோம். பணம் சேர்ப்பது சுலபமே என்று நீங்களும் சொல்வீர்கள்.
பர்சனல் பைனான்ஸ்
‘பர்சனல் பைனான்ஸ், பர்சனல் பைனான்ஸ்’ என்று பரவலாக எல்லோரும் எங்கும் பேசறாங்களே! அப்படின்னா என்ன?” என்று கேட்டார் எதிர்வீட்டு ஏகாம்பரம். பர்சனல் பைனான்ஸ் என்பது வேறொன்றுமில்லை, அது நிதி மேலாண்மை தான். ‘திட்டமிட்ட பண நிர்வாகம்’ என்பதே பொருத்தமான விளக்கம் ஆகும். தன்னுடைய சொந்த வருமானத்தையும் செலவுகளையும் புத்திசாலித்தனமாக நிர்வகித்து கையாள்வது தான் அது. கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால் எப்படி மேனேஜ் பண்றது? என்பதுதானே உங்கள் கேள்வி.
உங்கள் கேள்விக்கான விடையைத் தான் நாம் இங்கு தெளிவுபட விளக்க இருக்கிறோம். எனவே நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருகிறீர்கள்.
பர்சனல் பைனான்ஸ்சை ஒரு ஆர்ட் அதாவது ஒரு ‘கலை’ என்று சொல்லுகிறார்கள். இது பணக்காரர் களுக்கு மட்டுமில்லை , மாச சம்பளம் வாங்குபவர்கள், தொழில் செய்வோர், குடும்பத்தை கவனிக்கும் இல்லத்தரசி மற்றும் கல்வி பயலும் மாணவர் மாணவிகளுக்கும் அவசியம் தேவை. எப்படி என்று விரிவாகப் பாப்போம்.
பர்சனல் பைனான்ஸ் அடிப்படை
பர்சனல் பைனான்சின் அடிப்படையில் 3 விஷயங்கள் -சேமிப்பு, முதலீடு மற்றும் கடன் மேலாண்மை . இந்த மூன்று முக்கிய விஷயங்களைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு
சேமிப்பு வேறு முதலீடு வேறு. பலர் இதை தவறாகப் புரிந்துகொண்டு , சேமிப்பதுதான் முதலீடு என்று நினைக்கின்றனர். சேமிப்பு என்பது பணத்தை பத்திரமாக வைப்பது. சேமிப்பு வீட்டில் செய்யலாம் அல்லது வங்கியில் செய்யலாம். பணம் பத்திரமாக இருக்கும். வீட்டில் சேமித்தால் எடுத்து செலவழிக்காமல் இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டால், தேவையான பொழுது மட்டும் வங்கிக்குப் போயோ அல்லது ஆன்லைன் மூலமாக எடுத்து செலவு செய்யலாம்.
வங்கியில் சேமிக்கும் தொகைக்கு ஒரு சிறு வட்டி கிடைக்கும். இது நீங்கள் எத்தனை நாட்கள் எடுக்காமல் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சேமிப்பில் ஒரு பகுதியை எடுத்துவிட்டால், மீதமுள்ள தொகைக்கு மட்டும் காலத்திற்கு ஏற்ப வட்டி கிடைக்கும். இது எல்லா வங்கியிலும் மிகவும் குறைவாகவே இருக்கும்.
உதாரணமாக,
பாபு என்ற நண்பர் சொல்கிறார், “நான் என்னுடைய வருமானத்திலிருந்து மாசா மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை பாங்கில் உள்ள சேவிங்க்ஸ் அக்கௌண்டில் போட்டு வருகிறேன்” என்று. பாபு செய்வது சேமிப்பு என்றாலும் அது பன்மடங்கு பணம் பெருக வாய்ப்பில்லை.சேவிங்க்ஸ் அக்கௌன்டிற்கு மிகக் குறைந்த வட்டியே கிடைக்கும். அதுவும் அந்த பணத்தை எடுக்காமல் தொடர்ந்து சேமித்து வந்தால் மட்டுமே.
பெரிய அளவில் பணம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அந்த பணத்தை சரியான முறையில் முதலீடு செய்யவேண்டும். முதலீடு என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும்?. எப்படி முதலீடு செய்வது? தெரிந்துகொள்ளவேடும். வாருங்கள் மேலே தொடருவோம்.
முதலீடு
ஆனால் முதலீடு என்பது கிரிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் போடுவதால் அந்த திட்டத்திற்கும் முதல்ளேடு செய்வதற்குமான கால அளவிற்கும் ஏற்ப அதிக வருவாய் கிடைக்கும். இதைப்பற்றி நாம் தனியாக விரிவாக பின்னால் பார்க்க இருக்கிறோம். முதலீட்டில் பணம் வளர்ச்சி பெற்று பன்மடங்கு பெருக வாய்ய்ப்பு உள்ளது.
முதலீடு என்பது என்பது வங்கியில் போடுவது மட்டுமல்ல இன்னும் பல முறைகள் உள்ளன. நிலத்தில் முதலீடு செய்வது, வீட்டில் முதலீடு செய்வது , மியுச்சுவல் பண்ட மற்றும் சேர் மார்கெட்டில் முதலீடு செய்வது என பல வகைகள் உண்டு. முதலீட்டுக்கு தகுந்தாற்போல் பணம் வளர்ச்சி பெரும், பணம் பெருகும்.
கோவையில் வசிக்கும் பிரேமா சொல்கிறாள், “நான் வேலையில் சேர்ந்தவுடன், சம்பளத்திலிருந்து சேமித்த ரூ 500 ஐ, மாசா மாசம் SIP யில் முதலீடு செய்து வந்தேன். அப்போது நண்பர்கள் சிரித்து கேலி செய்தார்கள், ‘ இந்த 500 ரூ முதலீடு என்ன பெரிய செல்வத்தைக் கொண்டு வந்துடபோவுது?’ என்று. ஆனால் 12 வருடம் தொடர்ந்து முதலீடு செய்ததில், எனக்கு கணிசமாக 20 லட்சம் ரூபாயாக ரிடர்ன் கிடைத்தது” என்று. இது தான் முதலீட்டின் சக்தி. சரியான முதலீடு பல மடங்கு பணத்தைப் பேருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த திட்டாங்களைப் பற்றி எல்லாம் விரிவாக நாம் பின் வரும் பதிவுகளில் ஆராய்து முதலீட்டை மேற்கொள்ள இருக்கிறோம். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் தொடர்ந்து பதிவுகளை படித்துக்கொண்டே வாருங்கள். வெற்றி நிச்சயம்.
கடன் மேலாண்மை
வாழ்க்கையில் செலவுகளை மேற்கொள்ளும்பொழுது, பெரிய செலவுகளுக்காக நாம் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. உதாரணமாக பெரிய செலவுகளான வீடு கட்டுவது அல்லது வாங்குவது, கார் வாங்குவது , மகளின் திருமணச் செலவு போன்ற செலவுகள் நம் கையிருப்பில் உள்ள பணத்தை கொண்டு சமாளிக்க முடியாத பொழுது தேவைக்கு கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது இயற்கையே.
அந்த மாதிரி கடன் படுவது ஒன்றும் பெரிய தவறில்லை. எனினும் கடன் தொகையின் அளவு நம்மால் திருப்பி செலுத்தக்கூடிய அளவு இருத்தல் அவசியம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது பிற்காலத்தில் பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால்தான் கடன் மேலாண்மை அவசியம் என்று சொல்லப் படுகிறது. கடன் என்ன ? மாச தவணை எவ்வளவு செலுத்தவேண்டும். கடன் எத்தனை வருஷத்திற்குள் முடிவடையும் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து கடன் வாங்குவது நல்லது.
இந்த பிளாக் உங்களுக்கு என்ன சொல்லிகொடுக்கும்?
நிதிப் பயணத்தில் நாம் அலசி ஆராயப்போவது நிதி மேலாண்மை. நிதி மேலாண்மையால் மட்டுமே உங்கள் பணத்தை, உங்கள் செல்வத்தைப் பல மடங்கு பெருக்கமுடியும். நிதி மேலாண்மை என்பது வேறொன்றுமில்லை. பணத்தை எப்படி திறமையாக கையாள்வது என்பது தான். எனவே இந்த பிளாக்கில் நிதி மேலாண்மை பற்றி அலசி ஆராய உள்ளோம்.
நிதி மேலாண்மையின் அம்சங்கள்
- பண சேமிப்பு
- முதலீடு
- பங்கு சந்தை
- மியுச்சுவல் பண்ட்
- வரி சீரமைப்பு.
- உபரி வருமானம்
இவைகள் அனைத்தும் எளிய தமிழில், உதாரணங்களுடன் அலசி ஆராய உள்ளோம். இவைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் பெரிய பொருளாதாரம் படித்திருக்கவோ, பட்டங்களைப் பெற்றவராகவோ இருக்க வேண்டியதில்லை . சாமானியர்களும், எளியவர்களும், எளிதில் படித்து தெரிந்துகொண்டு நிதி மேலானமையில் வெற்றி பெற முடியும். இதற்குத் தேவை ஆர்வம் ஒன்றே! நீங்களே பார்க்கப் போகிரீர்கள் நிதி மேலாண்மை என்பது எவ்வளவு எளிது என்றும் , அதில் ஈடுபட்டு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்றும் தெரிய வரும்.
பிளாக்கின் நோக்கம்
பணத்தை கையாள்வதில் பலருக்கு பயம் இருக்கிறது. சேமிப்பு, முதலீடு, மியுச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை பற்றின அடிப்படை விஷயங்களை சரிவர புரிந்துகொள்ளாததே இதற்கு காரணம்.அதன் உண்மை விவரங்களை சாதாரண மக்களும் எளிதாகப் புரிந்துகொண்டு பணத்தை கையாண்டு சிறப்பான முறையில் பணத்தை நிர்வகிக்கும் அறிவை கொடுத்து பயமின்றி , வெற்றிகரமாக கையாண்டு பண சுதந்திரத்தை அடைவதுதான் இந்த பிளாக்கின் முக்கிய குறிக்கோள்.
எனவே பர்சனல் பைனான்சை எளிய மக்களின் வாழ்க்கைப் பழக்கமாக்கி திட்டமிட்டு செயலாற்றி நடைமுறைக்கு உகந்த வழியில் மிகவும் பயனுள்ள முறைகளை எளிமையான தமிழில் பல உதாரண விளக்கங்களுடன் விளக்குவது தான் நோக்கம். இந்த நிதி மேலாண்மையை கற்றுக்கொண்டு நீங்களும் பண மேலாண்மை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி காட்டுதல் ஆகும்.
இந்த பிளாக்கில் உள்ள அதி முக்கிய போஸ்டுகளைப் படிப்பதால் உங்களுக்கு என்ன நன்மை?
இந்த பிளாக் மூலம் ஸ்டெப் பை ஸ்டெப் விவரிக்கப்படும் நிதி மேலாண்மை திட்டங்களை நீங்கள் கற்றுக்கொண்டு உங்கள் நிதி மேலாண்மையை சரிவர பராமரித்து ப்ராக்டிகலாக உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் பல மடங்கு பெருக்கி உங்கள் திட்டமிட்ட இலக்கை அடைந்து மகிழ்ச்சியான வாழ்வுக்காண ஒரு வழிகாட்டி.
முடிவுரை
பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணத்தை சிறப்பான முறையில் நிர்வகித்து அதனை பல மடங்கு பெருக்கி வாழ்க்கையை வளம்பெறச் செய்வது. அதுதான் நமது நோக்கமாக இருக்கவேண்டும். அந்த வகையில் நிதி மேலாண்மை பற்றி ஒரு சிறு அறிமுகம் இங்கு செயப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதை எப்படி நிர்வகித்து மேம்படுத்துவது என்று பின் வரும் பதிவுகளில் விரிவாக ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம். எனவே தொடர்ந்து பதிவுகளைப் படித்து கவனமாக தெரிந்துகொண்டு நிதி மேலாண்மை என்ற இலக்கை விரைவிலேயே அடைய செயல்படுவோம்.