OR Gate Practical எப்படி செய்வது என்று இன்னும் குழப்பமா? IC 7432 பயன்படுத்தி OR Gate Logic Function-ஐ எப்படி செய்முறையாக நிரூபிப்பது என்பதை Circuit Diagram, தேவையான பாகங்கள், Step-by-Step Procedure, Observation Table, Results மற்றும் Truth Table உடன் மிக எளிய தமிழில் அறிந்துகொள்ளுங்கள். Practical தேர்வு, Viva மற்றும் Lab Record எழுதுவதற்கு இந்த முழுமையான வழிகாட்டி உங்களுக்கு சிறந்த உதவியாக இருக்கும்.
OR Gate Logic Function உண்மையில் எப்படி செயல்படுகிறது?
ஒரு LED மற்றும் சில அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பாகங்களைப் பயன்படுத்தி, IC 7432 மூலம் OR Gate-இன் செயல்பாட்டை எவ்வாறு நிரூபிப்பது என்பதை முழுமையாக அறிய விரும்புகிறீர்களா? இந்த பதிவில் Circuit Diagram முதல் Truth Table வரை அனைத்தும் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
AIM:
OR Gate-இன் Logic Function-ஐ நிரூபித்தல்
கற்றறியும் குறிக்கோள்கள் (Learning Objectives):
இந்தப் பரிசோதனையின் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் பின்வருமாறு:
OR Gate-இன் பண்புகளை (Characteristics) ஆய்வு செய்தல்.
OR Logic Function-இன் செயல்பாட்டை நிரூபித்தல்.
OR Gate-இன் செயல்பாட்டுப் பண்புகளை ஒரு எளிய எலக்ட்ரிகல் Analogy சர்க்யூட் மூலம் மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இங்கு எலக்ட்ரிகல் Analogy என்பது கீழே காட்டப்பட்டுள்ள ஒரு எளிய எலக்ட்ரிகல் சர்க்யூட்டைக் (Electrical Circuit) குறிக்கிறது.
OR Gate-இன் பண்புகள் குறித்த கோட்பாட்டை (Theory) ஏற்கனவே முந்தைய பதிவில் விரிவாகக் கற்றுள்ளோம். எனவே, இந்தப் பரிசோதனையைத் தொடங்குவதற்கு முன் அந்த கோட்பாட்டு பதிவைப் படித்து OR Gate-இன் செயல்பாட்டு பண்புகளைப் புரிந்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
OR Gate-இன் முக்கிய பண்புகள் சுருக்கமாக பின்வருமாறு:
“OR Gate-க்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இன்புட்டுகள் (Inputs) மற்றும் ஒரு அவுட்புட் (Output) இருக்கும். இன்புட்டுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்தும் Binary 1 ஆக இருந்தால், அதன் அவுட்புட் Binary 1 ஆக இருக்கும்.”
இதன் மூலம், நேர்மறை (Positive) அவுபுட் கிடைக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒரு இன்புட்டாவது Binary 1 ஆக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
OR Gate Logic Function பற்றிய முழுமையான விளக்கத்தை எங்கள் ‘லாஜிக் கேட்’ பதிவில் காணலாம்.
எலக்ட்ரிகல் சர்க்யூட் (The Electrical Circuit)

இந்த எலக்ட்ரிகல் அனாலாஜி சர்க்யூட்டை கவனிக்கவும். பாட்டரியின் பாசிடிவ் முனை S1 மற்றும் S2 என்ற இரண்டு சுவிட்ச்கள் மூலம் Lamp என்ற விளக்குடன் இனைகப்பட்டுள்ளது. இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டியது S1, S2 சுவிட்சுகள் இனைகபட்டுள்ள விதம். விளக்கு எரிய ஏதேனும் ஒரு சுவிட்ச் ஆன் செய்தால் போதும், விளக்கு எரியும். S1 ஆன் செய்து S2 ஆஃப் நிலையில் இருக்கலாம். அல்லது S1 ஆஃப் நிலையிலும் S2 ஆன் நிலையிலும் இருந்தாலும் விளக்கு எரியும். இரண்டு சுவிட்சுகளுமே ஆன் ஆன தன்மையில் இருந்தாலும் விளக்கு எரியும். இரண்டு சுவிட்சுகளும் ஆஃப் ஆகி இருந்தால் விளக்கு எரியாது என்பதை தெரிந்துகொள்ளவும்.
Quad 2-Input OR Gates – IC 7432


OR Gate Logic Function-ஐ செய்முறையாகப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் மின்சுற்று Quad 2-Input OR Gate IC 7432-ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
IC 7432 என்பது 14-Pin Dual In-line (DIL) IC ஆகும். இதில் நான்கு தனித்தனி OR Gate-கள் உள்ளன.
இந்த IC 5V DC மின்வழங்கலில் (Power Supply) செயல்படுகிறது.
Pin 14 (VCC)-க்கு +5V மின்வழங்கல் இணைக்கப்படுகிறது.
Pin 7 நில இணைப்பாக (Ground / Negative Supply) இணைக்கப்படுகிறது.
7432 IC-யில் உள்ள ஒவ்வொரு OR Gate-மும் இரண்டு உள்ளீடுகளை (Two Inputs) ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டது. எனவே ஒரே IC-யைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல Logic செயல்பாடுகளைச் செய்ய முடியும். இதனால் சிக்கலான Logic Circuit-களிலும் இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த IC, TTL (Transistor-Transistor Logic) மின்மட்டத்தில் (Logic Level) இயங்குகிறது. பொதுவாக 5V மின்வழங்கலில் செயல்படுகிறது. எளிய Binary Logic செயல்பாடுகள் தேவைப்படும் கல்வி மற்றும் நடைமுறை பயன்பாடுகளில் இந்த IC பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. OR Gate குறித்த கோட்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள முதலில் Theory பதிவைப் படித்து, பின்னர் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது சிறந்த புரிதலை வழங்கும்.
பரிசோதனைக்கான சர்க்யூட் டயக்ரம் (Circuit Schematic for the Experiment)

நமது செய்முறைப் பரிசோதனைக்காக IC 7432-இல் உள்ள நான்கு OR Gate-களில் ஒரு Gate மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சர்க்யூட் OR Gate Logic Function-ஐ நிரூபிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றில்:
Gate 1 பயன்படுத்தப்படுகிறது.
Pin 14-க்கு +5V வழங்கப்படுகிறது.
Pin 7 Ground-க்கு இணைக்கப்படுகிறது.
Pin 1 என்பது A Input ஆகும். இது S1 Switch மூலம் Power Supply-க்கு இணைக்கப்பட்டுள்ளது.
Pin 2 என்பது B Input ஆகும். இது S2 Switch மூலம் Power Supply-க்கு இணைக்கப்பட்டுள்ளது.
Pin 3 என்பது Y Output ஆகும்.
இந்த அவுட்புட் இரண்டு இடங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டு மின்னழுத்தத்தை அளவிட ஒரு DC Voltmeter
330Ω Current Limiting Resistor வழியாக Ground-க்கு ஒரு சிவப்பு LED இணைக்கப்பட்டுள்ளது.
தேவையான பாகங்கள் (Materials Required)
OR Gate Logic Function-ஐ செய்முறையாகப் பரிசோதிக்க கீழ்க்கண்ட பொருட்கள் தேவையாகும்.
இவை அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடியதும், குறைந்த செலவில் வாங்கக்கூடியதும் ஆகும். மேலும் இவற்றில் பெரும்பாலானவை அடுத்தடுத்த பரிசோதனைகளிலும் மீண்டும் பயன்படுத்தப்படலாம்.
வரிசை எண் பொருள் எண்ணிக்கை
1 IC 7432 Quad 2-Input OR Gate 1
2 சிவப்பு LED 1
3 330 ஓம் எதிர்ப்பு (Resistor) 1
4 DC Voltmeter (0–20V Range) 1
5 ON/OFF Switch 2
6 5V Regulated Power Supply 1
7 Electronic Breadboard 1
8 Jumper Wires தேவையான அளவு
சர்க்யூட் அசெம்பிளிங் (Assembling the Circuit)
தேவையான அனைத்து கூறுகளும் Electronic Breadboard-இல் எளிதாக பொருத்தப்படுகின்றன.
Circuit Schematic-இல் காட்டப்பட்டுள்ளபடி அனைத்து கூறுகளையும் சரியான இடங்களில் பொருத்தி, Jumper Wire-கள் மூலம் தேவையான மின் இணைப்புகளைச் செய்ய வேண்டும்.
Power Supply மட்டும் Breadboard-க்கு வெளியே இருக்கும். அதனைத் தவிர, அனைத்து கூறுகளும் Breadboard-இல் பொருத்தப்பட்டு, சரியான இணைப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த Logic Board என்பது ஒரு சாதாரண Electronic Breadboard மட்டுமே.
இதில்:
- Soldering தேவையில்லை.
- அதே பாகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
பாகங்கள் சேதமடையாது. - தொடக்கநிலையிலுள்ளவர்களும் (Beginners) மிகவும் எளிதாக அமைக்கலாம்.
- தவறான இணைப்புகளை எளிதாகச் சரிசெய்யலாம்.
- குறைந்த செலவில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
- இந்த அமைப்பு OR Gate Logic Function-ஐ செய்முறையாகப் புரிந்துகொள்ள மிகவும் ஏற்றதாகும்.
செய்முறை (Procedure)
- Circuit Schematic-இல் காட்டப்பட்டுள்ளபடி சர்க்யூட்டை கனெக்ட் செய்யவும்.
- IC-யின் Pin 14-ஐ +5V-க்கு மற்றும் Pin 7-ஐ Ground (Negative Supply)-க்கு Jumper Wire மூலம் இணைக்கவும்.
- ஆரம்பத்தில் S1 மற்றும் S2 ஆகிய இரண்டு Switch-களையும் OFF நிலையில் வைக்கவும்.
- இப்போது S1 Switch-ஐ மட்டும் ON செய்யவும்.
- DC Voltmeter-இல் காட்டப்படும் வெளியீட்டு மின்னழுத்தத்தை அளவிடவும்.
- சிவப்பு LED-இன் நிலையை கவனித்து பதிவு செய்யவும்.
- அதன் பிறகு S1-ஐ OFF செய்து, S2-ஐ மட்டும் ON செய்யவும்.
- வெளியீட்டு மின்னழுத்தத்தை அளவிடவும்.
- LED-இன் நிலையைப் பதிவு செய்யவும்.
- இப்போது S1 மற்றும் S2 ஆகிய இரண்டையும் ON செய்யவும்.
- வெளியீட்டு மின்னழுத்தத்தை அளவிடவும்.
- LED எரிகிறதா என்பதை கவனிக்கவும்.
- இரண்டையும் பதிவு செய்யவும்.
- பெறப்பட்ட முடிவுகளை கீழே உள்ள அட்டவணையைப் போல ஒழுங்காக பதிவு செய்து, அதன்பிறகு OR Gate-க்கான Truth Table-ஐ தயாரிக்கவும்.
பரிசோதனை முடிவுகள் (Result of the Experiment)
S1 S2 Voltmeter Reading LED நிலை
OFF OFF 0 V அணைந்துள்ளது
ON OFF +5 V எரிகிறது
OFF ON +5 V எரிகிறது
ON ON +5 V எரிகிறது
மேலுள்ள முடிவுகள் OR Gate Logic Function சரியாக செயல்படுவதை தெளிவாக நிரூபிக்கின்றன.
அதாவது:
OR Gate-க்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இன்புட்டுகள் மற்றும் ஒரு அவுட்புட் இருக்கும். இன்புட்களில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்தும் Binary 1 ஆக இருந்தால் அவுட்புட் Binary 1 ஆக இருக்கும். இதன் மூலம் பரிசோதனையின் இரண்டு குறிக்கோள்களும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளன.
இப்போது OR Gate-க்கான Truth Table-ஐ நம்பிக்கையுடன் உருவாக்கலாம்.
Truth Table
A B Y
0 0 0
1 0 1
0 1 1
1 1 1
முடிவுரை (Conclusion)
OR Gate Logic Function-இன் குறிக்கோள்களை நிரூபிப்பதற்காக மிகவும் எளிமையான இந்த செய்முறைப் பரிசோதனையை, குறைந்த எண்ணிக்கையிலான மின்னணு பாகங்களைப் பயன்படுத்தி ஆய்வகத்திலோ அல்லது வீட்டிலோ எளிதாக மேற்கொண்டோம்.
இந்தப் பரிசோதனையின் மூலம் OR Gate-இன் செயல்முறையை நடைமுறையில் புரிந்துகொள்வதோடு, அதன் Logic Function-ஐ நிரூபிக்கும் அனுபவமும் கிடைக்கிறது.
மேலும், இந்தப் பரிசோதனையின் அடிப்படையில் OR Gate-க்கான சரியான Truth Table-ஐ உருவாக்க முடிந்தது.
இந்த தொடரில் இதுபோன்ற மேலும் பல Digital Electronics செய்முறைப் பரிசோதனைகளை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து வெளியிட உள்ளோம். உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் எங்களை மேலும் மேம்படுத்த உதவும். உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை வரவேற்கிறோம்.








