முன்னுரை

நாற்பது வயதானபரமசிவம் என்னுடைய தெருவில் வசிக்கும் ஒரு நீண்ட கால நண்பர். மாநில அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் குடும்பஸ்தர்.அவருக்கு மனைவியும் ஹைஸ்கூலில்படிக்கும் இரு பிள்ளைகளும் இருக்கின்றனர். என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் வருமான பிரச்சனை சொல்லி மிகவும் நொந்துகொள்வார். “வருமானத்துக்கு மிஞ்சி செலவாகி கடன் வாங்கி கஷ்டப் படுகிறேன். குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லி வருத்தப்படுவார்.
அதேபோல் எதிர்வீட்டில் குடி இருக்கும் சங்கரும் ‘ சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியவில்லை. என்னால் மாசக் கடைசியில் ஒரு காசுகூட சேமிக்க முடிவதில்லை’ என்று சொல்லி புலம்புவார்.
இவர்களைப் போன்று பலரும் பணக் கஷ்டத்தால் மனம் உடைந்து பொய் இருக்கின்றனர். எப்படி செலவு செய்வது, எப்படி பணத்தை சேமிப்பது என்று சரியான வழி தெரியாமல் தடுமாடுகின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா? பணத்தை சேமிப்பது என்பது சுலபமானது. பணத்தை சேமிக்கவும் மட்டுமில்லாமல் பணத்தை பெருக்கவும் எளிய பிராக்டிகலான வழிகள் பல உள்ளன. பலர் அந்த வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் , சரியான திட்டம் இல்லாமல் கடனில் மூழ்கி அதிலிருந்து எப்படி மீள்வது என்பது தெரியாமல் தவிக்கின்றனர்.
உண்மை என்னவெனில் எல்லோராலும் சுலபமாக பணத்தை சேமித்து அதை பெருக்கவும் கடனின்றி வாழவும் முடியும் . எப்படி? என்னென்ன வழிகள்? எப்படி கையாள்வது என்று இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். பல அறிய நுணுக்கமான அடிப்படாஆஆஆஇ விஷயங்களை முதலில் தெரிந்துகொள்வோம். பணம் சேர்ப்பது சுலபமே என்று நீங்களும் சொல்வீர்கள்.
பர்சனல் பைனான்ஸ்
‘பர்சனல் பைனான்ஸ், பர்சனல் பைனான்ஸ்’ என்று பரவலாக எல்லோரும் எங்கும் பேசறாங்களே! அப்படின்னா என்ன?” என்று கேட்டார் எதிர்வீட்டு ஏகாம்பரம். பர்சனல் பைனான்ஸ் என்பது வேறொன்றுமில்லை, தன்னுடைய சொந்த வருமானத்தையும் செலவுகளையும் புத்திசாலித்தனமாக நிர்வகித்து கையாள்வது தான் அது. கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் எப்படி மேனேஜ் பண்றது? என்பதுதான் கேள்வி.
அதைத்தான் நாம் இங்கு தெளிவுபட விளக்க இருக்கிறோம். எனவே நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருகிறீர்கள்.
பர்சனல் பைனான்ஸ் ஒரு கலை என்று சொல்லுகிறார்கள். இது பணக்காரர் களுக்கு மட்டுமில்லை , மாச சம்பளம் வாங்குபவர்கள், தொழில் செய்வோர், குடும்பத்தை கவனிக்கும் இல்லத்தரசி மற்றும் கல்வி பயலும் மாணவர் மாணவிகளுக்கும் அவசியம் தேவை. எப்படி என்று விரிவாகப் பாப்போம்.
கோடி வீட்டு கோமளா சொல்கிறார், “ என் கணவர் கொண்டு வந்து தரும் 25000 ரூ சம்பள த்திளிரிந்து நான் வீட்டு செலவு போக தேவையான அளவு சேமிக்கிறேன் “ என்று. அதே மாதிரி குப்புசாமியும் சொல்கிறார்.” ஏன் மாச சம்பளம் 40000ரூ. வருமானத்துக்கு ஏற்ற செல்கவு செய்கிறேன். மாச கடைசியில் ரூ 2000 மிச்சபடுத்தி பணத்தை சேமிக்கவும் செய்கிறேன்” என்று.
உதாரணங்கள்
பக்கத்து வீட்டு ராமு சொல்கிறார், என்னுடைய மாச சம்பளம் 45000 ரூ. மாச கடைசியிலே எதுவுமே மிஞ்சறது இல்லே, எல்லாம் செலவாகி மாச கடைசியிலே கைமாத்து, கடன் வாங்கி சமாளிக்க வேண்டி இருக்கு” என்று புலம்புகிறார்.
இதற்கு காரணம் அதிக வருமானமோ குறைவான வருமானமோ அல்ல, கிடைக்கும் பணத்தை திட்டமிட்டு நிர்வகிக்கும் திறமைதான் என்றால் அதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?
42 வயதான சுரேஷ், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருடைய குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். அவர், அவர் மனைவி, இரண்டு குழந்தைகள். குழைந்தைகள் இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். மனைவி இல்லத்தரசி-அவுஸ் ஒய்ப். மாச வருமானம் 45000 ரூ. சரியாக 1ந் தேதி அவர் கையில் கிடைக்கிறது. அவர் எப்படி தன் மாச சம்பளத்தை செலவு செய்கிறார் என்று பாருங்கள்.
| செலவுகள் | தொகை ரூபாய் |
| வீட்டு வாடகை | 12000 |
| உணவுக்கான செலவு | 15000 |
| பிள்ளைகளின் கல்விச் செலவு | 7500 |
| போக்குவரத்து | 3500 |
| வீட்டு வாடகை | 12000 |
| உணவுக்கான செலவு | 15000 |
| பிள்ளைகளின் கல்விச் செலவு | 7500 |
| போக்குவரத்து | 3500 |
| வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிடுவது | 4000 |
| மால்களுக்கு சென்று பொருட்களை வாங்குவது | 3500 |
| EMI கட்டுதல் -தவணை செலுத்துதல் | 4500 |
| கேளிக்கை செலவு | 3000 |
மொத்த செலவு ரூ 53000. வருமானத்திற்கு மேலாக ரூ 8000 செலவு செய்கிறார். இருந்தும் எந்த சேமிப்பும் இல்லை. இதே போன்று மசா மாசம் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்கிறார். எனவே அவர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
ஆனால், 40 வயசான மகேஷ் எப்படி செலவு செய்கிறார் என்று பாப்போம். மகேஷ் குடும்பமும், சுரேஷ் குடும்பம் போன்றதே. அவரும் மாசா மாசம் சற்று குறைவாக ரூ 42000 சம்பாதிக்கிறார். அவர் எப்படி செலவு செய்கிறார் என்று பாப்போம்.
| செலவுகள் | ரூபாய்கள் |
| வீட்டு வாடகை | 12000 |
| சேமிப்பு என்று எடுத்துவைக்கப்படும் தொகை | 2500 |
| உணவுக்கு | 12500 |
| பிள்ளைகளின் கல்வி செலவு | 5000 |
| மியுச்சுவல் பண்ட -SIP | 500 |
| வெளியே சென்று சாப்பிடுவது | இல்லை |
| போக்குவரத்து | 2000 |
| தேவையற்ற பொருட்களை வாங்குவது | இல்லை |
| கேளிக்கை செலவு | 1000 |
| EMI கட்டுதல் | இல்லை |
முதலில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய என்று குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள தொகையைத்தான் மாச செலவுக்கு என்று திட்டமிட்டு செலவு செய்கிறார். அதன்படி செய்த மொத்த செலவு 32,500 ரூபாய் தான். அவசிய செலவுகளை மட்டும் நிர்வகிப்பதால், சேமிக்கவும் முடிகிறது, அவசர தேவைக்கு என்று ஒரு தொகையையும் ஒதுக்க முடிகிறது. இதன் விவரங்களை நாம் போகப் போக விரிவாக பார்க்க இருக்கிறோம். இதுதான் பர்சனல் பைனான்ஸின் நுணுக்கமாகும்.
இதையும் படிங்க: மாத சம்பளத்தில் பணம் சேமிக்க 10 எளிய வழிகள்
முதலீடு
பாபு என்ற நண்பர் சொல்கிறார், “நான் என்னுடைய வருமானத்திலிருந்து மாசா மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை பாங்கில் உள்ள சேவிங்க்ஸ் அக்கௌண்டில் போட்டு வருகிறேன்” என்று. பாபு செய்வது சேமிப்பு என்றாலும் அது பன்மடங்கு பணம் பெருக வாய்ப்பில்லை.சேவிங்க்ஸ் அக்கௌன்டிற்கு மிகக் குறைந்த வட்டியே கிடைக்கும். அதுவும் அந்த பணத்தை எடுக்காமல் தொடர்ந்து சேமித்து வந்தால் மட்டுமே.
பெரிய அளவில் பணம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அந்த பணத்தை சரியான முறையில் முதலீடு செய்யவேண்டும். முதலீடு என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும்?. எப்படி முதலீடு செய்வது? தெரிந்துகொள்ளவேடும். வாருங்கள் மேலே தொடருவோம்.
கடன் மேலாண்மை
வாழ்க்கையில் செலவுகளை மேற்கொள்ளும்பொழுது, பெரிய செலவுகளுக்காக நாம் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. உதாரணமாக பெரிய செலவுகளான வீடு கட்டுவது அல்லது வாங்குவது, கார் வாங்குவது , மகளின் திருமணச் செலவு போன்ற செலவுகள் நம் கையிருப்பில் உள்ள பணத்தை கொண்டு சமாளிக்க முடியாத பொழுது தேவைக்கு கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது இயற்கையே.
அந்த மாதிரி கடன் படுவது ஒன்றும் பெரிய தவறில்லை. எனினும் கடன் தொகையின் அளவு நம்மால் திருப்பி செலுத்தக்கூடிய அளவு இருத்தல் அவசியம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது பிற்காலத்தில் பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால்தான் கடன் மேலாண்மை அவசியம் என்று சொல்லப் படுகிறது. கடன் என்ன ? மாச தவணை எவ்வளவு செலுத்தவேண்டும். கடன் எத்தனை வருஷத்திற்குள் முடிவடையும் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து கடன் வாங்குவது நல்லது.
சேமிப்பு
சேமிப்பு வேறு முதலீடு வேறு. பலர் இதை தவறாகப் புரிந்துகொண்டு , சேமிப்பதுதான் முதலீடு என்று நினைக்கின்றனர். சேமிப்பு என்பது பணத்தை பத்திரமாக வைப்பது. சேமிப்பு வீட்டில் செய்யலாம் அல்லது வங்கியில் செய்யலாம். பணம் பத்திரமாக இருக்கும். வீட்டில் சேமித்தால் எடுக்காமல் இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டால், தேவையான பொழுது மட்டும் வங்கிக்குப் போயோ அல்லது ஆன்லைன் மூலமாக எடுத்து செலவு செய்யலாம்.
வங்கியில் சேமிக்கும் தொகைக்கு ஒரு சிறு வட்டி கிடைக்கும். இது நீங்கள் எத்தனை நாட்கள் எடுக்காமல் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சேமிப்பில் ஒரு பகுதியை எடுத்துவிட்டால், மீதமுள்ள தொகைக்கு மட்டும் காலத்திற்கு ஏற்ப வட்டி கிடைக்கும். இது எல்லா வங்கியிலும் மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஆனால் முதலீடு என்பது கிரிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் போடுவதால் அந்த திட்டத்திற்கும் முதல்ளேடு செய்வதற்குமான கால அளவிற்கும் ஏற்ப அதிக வருவாய் கிடைக்கும். இதைப்பற்றி நாம் தனியாக விரிவாக பின்னால் பார்க்க இருக்கிறோம். முதலீட்டில் பணம் வளர்ச்சி பெற்று பன்மடங்கு பெருக வாய்ய்ப்பு உள்ளது.
முதலீடு என்பது என்பது வங்கியில் போடுவது மட்டுமல்ல இன்னும் பல முறைகள் உள்ளன. நிலத்தில் முதலீடு செய்வது, வீட்டில் முதலீடு செய்வது , மியுச்சுவல் பண்ட மற்றும் சேர் மார்கெட்டில் முதலீடு செய்வது என பல வகைகள் உண்டு. முதலீட்டுக்கு தகுந்தாற்போல் பணம் வளர்ச்சி பெரும், பணம் பெருகும்.
பிளாக்கின் நோக்கம்
பணத்தை கையாள்வதில் பலருக்கு பயம் இருக்கிறது. சேமிப்பு, முதலீடு, மியுச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை பற்றின அடிப்படை விஷயங்களை சரிவர புரிந்துகொள்ளாததே இதற்கு காரணம்.அதன் உண்மை விவரங்களை சாதாரண மக்களும் எளிதாகப் புரிந்துகொண்ட பணத்தை கையாண்டு சிறப்பான முறையில் பணத்தை நிர்வகிக்கும் அறிவை கொடுத்து பயமின்றி , வெற்றிகரமாக கையாண்டு பண சுதந்திரத்தை அடைவதுதான் இந்த பிளாக்கின் முக்கிய குறிக்கோள்.
எனவே பர்சனல் பைனான்சை எளிய மக்களின் வாழ்க்கைப் பழக்கமாக்கி திட்டமிட்டு செயலாற்றி நடைமுறைக்கு உகந்த வழியில் மிகவும் பயனுள்ள முறைகளை எளிமையான தமிழில் பல உதாரண விளக்கங்களுடன் விளக்குவத் தான் நோக்கம். இந்த நிதி மேலாண்மையி கற்றுக்கொண்டு நீங்களும் பண மேலாண்மை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி காட்டுதல் ஆகும்.
இந்த பிளாக்கில் உள்ள அதி முக்கிய போஸ்டுகளைப் படிப்பதால் உங்களுக்கு என்ன நன்மை?
இந்த பிளாக் மூலம் ஸ்டெப் பை ஸ்டெப் விவரிக்கப்படும் நிதி மேலாண்மை திட்டங்களை நீங்கள் கற்றுக்கொண்டு உங்கள் நிதி மேலாண்மையை சரிவர பராமரித்து ப்ராக்டிகலாக உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் பல மடங்கு பெருக்கி மகிழ்ச்சியான வாழ்வுக்காண ஒரு வழிகாட்டி. .
முடிவுரை
பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணத்தை சிறப்பான முறையில் நிர்வகித்து அதனை பல மடங்கு பெருக்கி வாழ்க்கையை வளம்பெறச் செய்வது தான் நமது நோக்கமாக இருக்கவேண்டும். அந்த வகையில் பணத்தைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் இங்கு செயப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதை எப்படி நிர்வகித்து மேம்படுத்துவது என்று பின் வரும் பதிவுகளில் விரிவாக ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம். எனவே தொடர்ந்து பதிவுகளைப் படித்து கவனமாக தெரிந்துகொண்டு நிதி மேலாண்மை என்ற இலக்கை அடைய செயல்படுவோம்.