மாத சம்பளத்தில் பணம் சேமிக்க சூப்பரான 10 எளிய வழிகள்

முன்னுரை

பணம் சேமிப்பு என்பது ஒரு கலை. அந்த கலையை எப்படி செயல் படுத்துவது என்பதுதான் இந்த போஸ்டின் நோக்கம். தொடர்ந்து படியுங்கள் ‘மாத சம்பளத்தில் பணம் சேமிக்க 10 வழிகள்’.

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் செந்தில் சொல்கிறார், ‘என்னுடைய மாத வருமானம் என்னவோ 55000 ரூபாய். ஆனால், மாத கடைசியில் 20 தேதிக்குப் பிறகு கையில் மிஞ்சுவதோ வெறும் 10000 ரூபாய்தான். மாதத்தின் கடைசி நாள் நெருங்க நெருங்க அந்த காசும் செலவாகிப் போய் நண்பரிடம் கை மாத்தாக 5000 ரூபாய் வங்க வேண்டிய நிலைமை உண்டாகிறது’ என்று நொந்து கொள்கிறார்.

அரசு அலுவலகத்தில் கிளரிக்கல் அசிஸ்டண்டாக வேலை செய்யும் சரோஜா சொல்கிறார். ’என்னுடைய சம்பளமும், கோஆபறேடிவ் சொசைடியில் வேலை செய்யும் என்னுடைய கணவரின் சம்பளமும் சேர்த்து மொத்தம் 65000 ரூபாய் சம்பாதிக்கிறோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் தனியார் ஹைஸ்கூலில் படிக்கின்றனர். மாத கடைசியில் கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகி விடுகிறது. சம்பளப்பணம் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை என்று கவலையுடன் சொல்கிறார்.

இது மாதிரி சம்பளம் பற்றாக்குறையால் கஷ்டப்படும் நபரா நீங்கள். கவலைப்படாதீர்கள், நீங்கள் சரியான விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். கூடிய விரைவிலேயிலேய இந்த இக்கட்டான சூழ் நிலையிலிருந்து விடு படுவீர்கள். நீங்களும் சேமிக்க ஆரம்பித்து பண மேலாண்மையில் சிறந்து விளங்குவீர்கள்.

‘மாத சம்பளத்தில் பணம் சேமிப்பது’ என்பது ஒரு முக்கிய நிதித் திறன் ஆகும். நிதித் திறன் என்பது வேறொன்றுமில்லை, அது ஒரு பழக்கமே. ஒவ்வொருவரும்.அதை கற்றுக்கொள்ள இங்கே 10 எளிய வழிகள் சொல்லப்பட்டுள்ளன. இந்தபிராக்டிகல் வழிகளை பின்பற்றி நீங்களும் பணம் சேமிக்க துவங்கலாம். சம்பளம் குறைவாக இருந்தாலும் புத்திசாலித் தனமாக திட்டமிட்டால் உங்களாலும் சேமிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டுவீர்கள்.

பலர் நினைக்கிறார்கள் அதிகமான வருமானம் உள்ளவர்களால் மட்டுமே சேமிக்க முடியும் என்று. அது தவறான கருத்து. குறைந்த மாதாந்திர வருமானம் உள்ளவர்கள் அனைவராலும் சரியான பழக்கங்களை மேற்கொள்வதால் அது சாத்தியமாகும். எப்படி? என்ன? என்று விவரமாகப் பார்ப்போம்.

இதையும் படிங்க: பர்சனல் பைனான்ஸ்

‘பணம் சேமிப்பு’ பிரச்சனை என்ன?

சம்பளம் வாங்கி சில நாட்களிலேயே தண்ணீரில் போட்ட உப்பு போல வேகமாகக் கரைந்துவிடுகிறது. இது பலராலும் எதிர்கொள்ளும் பிரச்சினை. வீட்டு செலவு, போக்குவரத்து செலவு, உணவு மற்றும் கடன் தவணை கட்டுதல், மற்ற விருப்பச் செலவுகள் என்று பார்த்தால் மாதக் கடைசியில் வாங்கிய சம்பளம் அனைத்தும் கரைந்து, மற்றவர்களிடம் கைமாத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் சரியாகத் திட்டமிட்டு கவனமாக செலவு செய்தால் குறைவான சம்பளம் வான்குபவர்களால் கூட சேமிக்க முடியும்.

பணம் சேமிக்க 10 வழிகள்

ஸ்டெப் 1-முதலில் சேமி பிறகு செலவு செய் (Pay yourself first)

சம்பளம் கைக்கு வந்தவுடன் செலவு செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இது முக்கியம், அது முக்கியம் என்று ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கு அடு க்காக செலவு செகின்றனர். செலவு போக கடைசியில் ஏதாவது மிஞ்சினால் சேமிக்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த பழக்கம் பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகிறது. ஓர் உதாரணம் பார்ப்போமே.

சங்கரின் மாத வருமானம் 45000 ரூபாய். அத்தியாவசிய செலவுகளுக்கு என்று பணம் ஒதிக்கி செலவு செய்வதால் கடைசியில் மிஞ்சுவது ஒன்று இல்லாமல் போகிறது. சங்கர் என்ன செய்யவேண்டும் .சம்பளம் கிடைத்தவுடன் அதில் 20சதவிகிதம் சேமிப்புக்கு என்று எடுத்து ஒதுக்கி வைத்து விடவேண்டும். 20 சதவிகிதம் என்பது 9000 ரூபாய் ஆகும். இதையே ஆங்கிலத்தில் ‘pay yourself first’என்று சொல்லுவார்கள். உங்களுக்கு என்று நீங்களே கொடுத்துகொள்ளுங்கள் என்பதாகும்.

இது போன்றே ஒவ்வொரு மாதமும் சிறுகச் சிறுக சேமிக்கவேண்டும். அந்த தொகையை தனியாக சேமிப்பு வங்கியில் சேமிக்க தொடங்கவும். ஒதுக்கிய தொகையைத் தவிர மீதி உள்ள தொகையை சரியான முறையில் திட்டம் இட முடியும். இதுதான் சேமிப்பின் மிக முக்கிய அடிப்படை விதியாகும்.

ஸ்டெப் -2 : மாதாந்திர பட்ஜெட் போடவும்.

கடலில் செல்லும்பொழுது திசை அறிதல் வேண்டும். திசை தெரியாத கடல் பயணம் ஆபத்தானது. அது போலவே வாழ்க்கையிலும் பட்ஜெட் இல்லா வாழ்க்கை கடல் பயணம் போன்றது.
பட்ஜெட் எப்படி போடுவது? என்னென்ன சேர்ப்பது?
பட்ஜெட்டில் முதலில் மிகவும் அடித்தள அத்தியாவசியமான செலவுகளுக்கு என்று பட்டியலிட்டு அதற்கான தொகையை ஒதுக்குவது. உதாரணமாக இப்படி போடலாம்.

வீட்டு வாடகை
உணவு செலவு -இதில் மளிகை சாமான்கள் அடங்கும்.
மின்சார செலவு
போக்குவரத்து மற்றும் பயண செலவு
மருத்துவ செலவு.
தண்ணீர் மற்றும் போன் ரீசார்ஜ்
சேமிப்பு
கடன் (தவணை + வட்டி)  /EMI கட்டுதல்
பொழுதுபோக்கு
ஷாப்பிங்

ஸ்கூல் பீஸ் (இருந்தால் )

 

இப்படி பட்ஜெட் போடும்பொழுது எங்கு எதில் அதிகம் செலவிகிறது, எப்படி செலவைக் குறைக்கலாம் என்ற வழி தெரிய வரும். இது கட்டாயமில்லை. இருப்பினும் செலவை முறைபடுத்த சிறந்த வழி. சரியான தேவைக்கு சரியான பணம் ஒதுக்கும் வழி தெரியும். நம்மை மீறி ஏற்படும் தேவையட்ட்ற செலவுகளை கட்டுபடுத்த முடியும். செய்து பாருங்கள் உண்மை புரியும்.

ஸ்டெப் -3 :தேவைகளையும் ஆசைகளையும் சமாளித்தல்

மாலாவுக்கு லேட்டஸ்ட்டா வந்துள்ள புது போன் வாங்க ஆசை. ஆனால் மாதா மாதம் மின்சாரத்திற்கும் , போக்குவரத்துக்கும் ஆகிற செலவை சமாளிக்க கூடுதல் பணம் தேவைப்படுகிறது. போன் இப்பொழுது தேவையா? வாங்க வேண்டுமா? வாங்குவதை தள்ளிப் போட்டால் என்ன ? இதனால் தேவையற்ற செலவுகளை கட்டுபடுத்த முடியும்.

தினசரி செலவுகளை கண்காணித்தல். வெளியில் போகும்பொழுது எல்லாம் டீ அல்லது காப்பி சாப்பிடுவது, ஸ்நாக்ஸ் வாங்குவது ஆகும். ஒரு நாளைக்கு 100-150 ரூ  செலவழித்தால் மாதம் 3000 -4500 ரூ வரை செலவாகும். இதை எளிமையான மாதாந்திர SIP க்கு பயன் படுத்தலாம். எவ்வளுவு பெரிய தொகை !

ஸ்டெப் -4: 50-30-20 பணம் சேமிப்பு பார்முலா (சூத்திரம்)

கணக்கு பாடத்தை படிக்கும்பொழுது கணக்கு போட ஒரு குறிப்பிட்ட ( சூத்திரம்) பார்முலாக் களைப் போட்டு விடை காண்கிறோம். அது போலவே நாம் நம் மாதாந்திர் வரும்மனத்தையும் பார்முலா போட்டு செலவு செய்தால் வேண்ட்டாத செலவுகளை தவிர்த்து பணத்தை உறுதியாகச் சேமிக்க முடியும். அப்படி என்ன பார்முலாவை நாம் சேமிக்க பயன்படுத்தலாம் என்று பாப்போம். ஒரு எளிய பர்முல 50-30-20 தான் அது. உங்களுக்கு சம்பளம் கிடைத்தவுடன் அதை 50-30-20 பங்காக அதாவது 50 சதவிகிதம் அத்தியாவசிய அவசிய செலவு, அடுத்த 30 சதவிகிதம் தனிப்பட்ட விருப்பன்கான செலவு. மீதமுள்ள 20சதவீதம் சேமிப்பு மற்றும் முதலீடு. இந்த சேமிப்பை உங்கள் வருமானத்திற்கு ஏற்ப 10 அல்லது 15 சதவிகிதமாக மாற்றி வைத்துகொள்ளலாம். எப்படி இருப்பினும் சேமிப்புக்கு என்று கட்டாயம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கியே ஆக வேண்டும் என்று நிர்ணணயம் செய்துகொள்ளுங்கள்.

ஸ்டெப் 5: கிரெடிட் கார்டை கவனமாக பயன்படுத்துதல்

இன்று கிரெடிட் கார்டு ஒரு பாஷனாகிவிட்டது. கிரெடிட் கார்ட் வைத்திருந்தால் தான் மதிப்பு என்று பலர் நினைக்கிறார்கள். கிரெடிட் கார்ட்டில் பல வசதிகள் இருந்தாலும் முறையாக கட்டுபாட்டக பயன்படுத்தவில்லை என்றால் அது போன்ற ஆபத்து கிடையாது. மாத மாதம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்ட நாளுக்குள் கட்டியாக வேண்டும். இல்லை எனில் பல மடங்கு வட்டி செலுத்துவதுடன் பண சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். EMI கட்டியே வருமானத்தைவிட அதிக தொகை தேவைப்படும். சமாளிக்கமுடியாமல் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப் படுகிரீர்கள். எனவே கிரெடிட் கார்டை கவனம்மாக கையாண்டால் பணசிக்களில்  இருந்து விடுபடலாம்.

ஸ்டெப்- 6: வெளியே ஹோட்டல்களில் சாப்பிடுவதை குறைக்கவும்.

பலருக்கு இந்த பழக்கம் உண்டு. வார இறுதி நாட்களில் அல்லது முக்கிய நாட்களில் வெளியே போய் ஹோட்டல்களில் சாப்பிடும் பழக்கம். இது உணவுக்காக அதிக பணம் செலவு செய்ய வைக்கும். மற்றும் தொடர்ந்து சாப்பிட உடல் நலம் கெடவும் வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை சேமிக்க வாராவாரம் வெளியே சென்று சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக மாத கடைசியில் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

உதாரணமாக ஒருவருக்கு ஒரு வேளை ஹோஓட்டலில் சென்று சாப்பிட ரூ. 300 தேவைபட்டால் குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கு ரூ 1200செலவாகும். மாதத்தில் நான்கு முறை சாப்பிட்டால் ரூ 5000 வரை செலவாகும். இதை மிச்சப்டுத்தினால் EMI கட்டுவதற்கோ அல்லது SIP கோ செலவிட முடியும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே வீட்டில் சமைத்து சாப்பிடுவது எல்லா விதத்திலும் நல்லது.

ஸ்டெப் 7:அவசர நிதியை ஏற்படுத்துங்கள்

திடீரென்று நம் உடல் நிலை சரியில்லாமல் போகலாம். அப்போது எதிர்பாராத மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது தாமதமின்றி சிகிச்சை மேற்கொள்ள பணம் உடனடியாக தேவைப்படும். இது தவிர தவிர்க்க முடியாத காரனங்களால் வேலை இழப்பு அல்லது வரும்மான குறைப்பு ஏற்படலாம். அந்த மாதிரி சமயங்களில் பணப் பற்றாக்குறையை போக்க அவசர நிதி ஏற்படுத்தி வைத்திருந்தால் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவும். குறைந்தது 6 மாத செலவுக்கான தொகையைவதுஅவசரகால நிதி என்று சேமித்து வைத்திருக்கவேண்டும். உதாரணமாக மாதம் 30000 ரூபாய் செலவாகிறது என்றால் குறைந்தது 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயாவது அவசரகால நிதியாக சேமிக்க வேண்டும். எப்படி சேமிப்பது எங்கு சேமிப்பது என்று பின் வரும் போஸ்டுகளில் அலசி ஆராய்வோம்.

ஸ்டெப் -8:சலுகை /ஆபர்களை பயன்படுத்துங்கள்

புது வருடப் பிறப்பு ,தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ சமயங்களில் பொருட்கள் ஆபர் விலையில் அதாவது சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கும். அப்போது காத்திருந்து பொருட்களை வாங்குவது பெரும் பணத்தை மிச்சம் செய்ய உதவும். அதனை அப்படியே சேமிக்கலாம். ஆபர் சமயங்களில் பொருட்கள் வாங்க கணிசமான தள்ளுபடி வழங்குவதால் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி பணத்தை மிச்சபடுத்த முடியும். அட்சய திருத்திகை நாட்களில் தங்கம் வாங்க தள்ளுபடி விலையும் பல சலுகைகளும் கிடைக்கும். இதனால் அக்காலங்களில் சாதாரண விலையைவிட மலிவாகக் கிடைப்பதால் அதிக பணம் சேமிக்க முடியும்.

எதிர்வீட்டு சீதா சொல்கிறார், ‘ நான் வழக்கமாக தங்கம் வாங்க அட்சய திருத்திகை நாளைதான் தேர்ந்தெடுக்கிறேன். அப்போது பல நகை கடை விற்பனையாளர்கள் தங்கம் வாங்க கிராமுக்கு இவ்வளவு என்று தள்ளுபடி அறிவித்து வழக்கத்தைவிட குறைவான விலையில் தங்க நகைகளை விற்கிறார்கள். நான் ஏன் பெண் நீலாவுக்கும் எனக்கும் அன்று மட்டும் தங்கம் வாங்குகிறேன்’ என்கிறார். இதனால் எனக்கு 5000 முதல் 10000ரூபாய் வரை என்னால் சேமிக்க முடிகிறது என்கிறார்.

மற்றொரு முக்கிய வழிமுறை,எப்பொழுதும் ஹோல்சேல் கடையில் பல்க்காக மளிகை சாமான்களை வாங்குவது. மலிவான விலையில் வாங்குவதோடு கணிசமான பணத்தையும் சேமிக்க முடியும்.மாதக் கடைசியில் பொருள் மற்றும் பணம் தட்டுபாடு வராது.

சில வியாபாரத்தில் காஷ் பாக் ஆபர்கள் கிடைக்கும். இன்ன தொகைக்கு வியாபாரம் செய்தால் இவ்வளவு பணம் காஷ் பாக் ஆகக் கிடைக்கும். அவற்றைப் பார்த்து வாங்குவது பண சேமிப்பை ஊக்குவிக்கும்.

ஸ்டெப் 9: ஆட்டோமாடிக் பணம் சேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபீஸ் அல்லது பாங்கில் ரெகரிங் டெபாசிட் திட்டம் RD துவக்கி அதில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்டா தொகையைப் போடலாம். இதனால் சேமிப்பு வளர்வதோடு தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க முடியும். அதுபோன்றே SIP systematic investment plan மற்றும் ஆட்டோ டிரான்ஸ்பர் முறைகளைக் கையாளுதல். ஆட்டோ டிரான்ச்பர் முறைகளில் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளத்திலிருந்து  சேமிப்புக்கு காட்டாயம்  போய்விடும்.

உதாரணமாக RD இல் 1 வருடத்திற்கு மாதாமாதம் 2000 ரூ கட்டினால் ஒரு வருட முடிவில் அசல் 24000ரூ உடன் வட்டியும் சேர்ந்து கிடைக்கும். இது ஒரு முக்கிய சேமிப்பு திட்டாமாகும். இதைப்பற்றி நாம் விரிவாக பின்னர் பார்க்க இருக்கிறோம்.

ஸ்டெப் 10: பணம் சேமிப்பு இலக்கு

சிறிய இலக்குகளுடன் சேமிக்க தொடங்குங்கள்
இலக்குகளை வைத்து சேமிக்கத் தொடங்கும்பொழுது ஆராம்ப காலங்களில் சிறிய இலக்குகளை வைத்து தொடங்குங்கள்.
உதாரணம் 1: 5 மாதங்களில், 50000ரூ அவசரகால நிதி உருவாக்க நினைக்கிறீர்கள், என்றால் மாதம் 10000ரூ சேமிக்க வேண்டும்.
உதாரணம் 2: 6 மாதத்திற்குப் பிறகு 1 லட்சம் ரூ செலவில் வீட்டு பராமரிப்பு மேற்கொள்ள இருக்கிறீர்கள் என்றால் மாதம் 17000 ரூ சேமிக்க வேண்டும்.

இலக்கு வைத்து சேமிப்பது மிக அவசியம். அப்போதுதான் எதற்கு எவ்வளவு சேமிக்கவேண்டும் என்று தெரியும். மாதா மாதம் கட்டாயம் சேமிக்க உங்கள் இலக்குகளை நிர்ணயுங்கள். இலக்கு வைத்தால் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். சேமிப்பதும் எளிது. இலக்கை அடைவதும் எளிது.

உதாரணம் 3: நீங்கள் 5 மாதத்தில் 1 லட்சம் ரூ எமர்ஜன்சி பண்டு உரூவாக்க  நினைக்கிறீர்கள். மாதம் 20000 ரூ சேமிக்க ஆரம்பித்தால் , 5 மாத முடிவில் உங்கள் இலக்கை அடைய முடியும்.

இதுபோன்றே கீழ்கண்ட இலக்குகளை மேற்கொள்ளலாம்.

வீடு வாங்க

குழந்தைகளின் கல்வி

மகன்/மகள் திருமணத்திற்கு

சுற்றுலா பயணம் மேற்கொள்ள

ஒய்வு கால நிதி

போன்றவைகள் இலக்காகக் கொள்ளலாம்.

முடிவுரை

இங்கு சொல்லப்பட்டுள்ள 10 நடைமுறை வழிகள் அனைத்தும் பயன் தரக்கூடியவை. சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திகொண்டால் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறையை சமாளிக்க தக்க சமயத்தில் கைகூடும். சிறு சேமிப்புதான் பெரும் செல்வம் சேர்க்க தொடக்க வழி ஆகும். ஆகவே சேமியுங்கள். வாழ்க்கையில் நிதி சுதந்திரத்துடன் வாழ வழி கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *